சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு

🕔 February 28, 2018

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

‘இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கிறது. சீனாவில் சுமார் 24 கோடியே 10 லட்சம் பேர், 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது, சீன மக்கள் தொகையில் முதியவர்கள் 17.3 சதவீதமாக வியாபித்துள்ளனர்.

இந்த நிலை தொடருமேயானால், 2050ஆம் ஆண்டு சீனாவில் 48 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, நாட்டு மக்கள் தொகையில் 34.9 சதவீதமாகும். இவ்வாறு முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் செயல்திட்டம் வகுத்து வருகிறது’ என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1979ஆம் ஆண்டு ‘ஒரு குழந்தை கொள்கை’ அமுல்படுத்தப்பட்டது. இதன்மூலம் குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், மறுபுறம் முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது.

எனவே, ‘ஒரு குழந்தை கொள்கை’யை 2016ஆம் ஆண்டு சீன அரசாங்கம் ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்