புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

🕔 December 2, 2017

ரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தெஹியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தெஹியந்தர – முலதியான பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுடைய புத்தகப் பையினை பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர்களில் ஒருவரினுடைய பையிலிருந்து 270 மில்லி கிராம் அளவான கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பட்ட தகவல் ஒன்றினை அடுத்து, மேற்படி சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, கஞ்சா வைத்திருந்த மாணவனை கைது செய்த பொலிஸார், அவரை தெஹியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது, குறித்த மாணவனை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் விடுவித்ததோடு, எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதியன்று, மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்