ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

🕔 October 8, 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிய முடிகிறது.

இவ்விடயம் தொடர்பாக  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணம் செலுத்தி வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விடவும், மேற்கூறப்பட்ட நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு வாகனங்களைப் பெற்றுக் கொண்டமை மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டபோது அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் தயாசிறி விஜேசேகர ஆகியோர், இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது.

இதன்போது, ரவி கருணாநாயக்க மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டினை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

மத்திய வங்கி – பிணை முறி மோசடியுடன் ரவி கருணாநாயக்க தொடர்புபட்டார் எனக் கூறப்பட்டதையடுத்து அவருடைய நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட போதும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பாரிய விமர்சனங்கள் எழுந்தமையினால், தனது அமைச்சுப் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்