மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

🕔 September 8, 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால்  மெக்ஸிகோ உள்ளிட்ட 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவாத்தமாலா, எல்சல்வடோர், கொஸ்டாரிகா, நிகரகுவா, பனாமா, ஹொன்டுராஸ் மற்றும் ஈக்வடோர் ஆகியவை, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளாகும்.

இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்