அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்
– அஹமட் –
விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளிவிவகார அமைச்சராக மங்கள பதவி வகிக்கின்றார்.
இதேவேளை, நிதியமைச்சராக தற்போது பணியாற்றும் ரவி கருணாநாயகவுக்கு, வெளிவிவகார அமைச்சு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஊடகத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கயந்த கருணாதிலக்க, பொது நிர்வாக அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், தற்போது பொது நிர்வாக அமைச்சராகப் பதவி வகிக்கும் ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு காணி அமைச்சு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.