லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில்

🕔 November 4, 2016

accisent-08– க.கிஷாந்தன் –

லொறியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து கொட்டகலை நகரப் பகுதியில்  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை ஹரிங்டன் தோட்ட பகுதிக்கு சென்ற லொறியும், மோட்டார் சைக்கிளும் கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது படுங்காயமடைந்த மோட்டர் சைக்கிள் சாரதி, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெய்து வரும் மழை காரணமாக, வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையினால், இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.accisent-09

Comments

புதிது பேஸ்புக் பக்கம்