
பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி தொழிற்சாலையில் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. வெடிப்பின் காரணமாக, கட்டிடத்தின் நான்கு மாடிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன.
சம்பவம் நடைபெற்றபோது தொழிற்சாலையினுள் ஊழியர்கள் இருந்துள்ளனர். ஆயினும், வெடிப்பினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயங்களுக்குள்ளான 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், உயிரிழப்பு அதிகமாகலாம் என்று பொலிஸார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் ஏற்பட்ட தீயினை அணைக்கும் நடவடிக்கையில், நூற்றுக் கணக்கான தீயணைப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என இன்னும் தெரியவரவில்லை.




