ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.