இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

🕔 March 6, 2016

Kalabavanmani - 08ந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார்.

கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார்.

சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன்மணியின் நடிப்புக்காக‌ மிகவும் பேசப்பட்டது.

வித்தியாசமான அங்க அசைவுகளை செய்து காட்டி நடிப்பதில் இவர் தனி அடையாளம் பெற்றவர். இவர் ஒரு பாடகர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கலாபவன்மணி நடித்த மலையாளப் படத்தின் பாத்திரத்தில்தான், தமிழில் காசி படத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய சினிமா விருதுகளை கலாபவன்மணி பெற்றுள்ளார்.

Comments

பின் தொடருங்கள்