மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

🕔 October 21, 2018

ஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளதாக இரிதா திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 15 பேரைக் கொண்ட குழுவினரும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை மேற்படி தரப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த போது, இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக, சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்