ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

🕔 August 19, 2018

ரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அரசியலமைப்பின் 19ஆவது  திருத்தத்துக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தான் கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

பிலியந்தலை – மாகந்தன பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவசேன மருந்தகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

Comments