சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன்

🕔 March 13, 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் நீக்கப்படும் என்று, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவொன்று, வரும் வியாழக்கிழமை இலங்கை வந்து, அரசாங்க அதிகாரிகளுடன் தற்போதைய நிலைவரம் குறித்து பேச்சு நடத்துவர் எனவும், அவமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments