எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

🕔 January 2, 2018

ரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய் விடுவதாகவும் இதன்போது நாமல் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய 78 பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments