காதல் விவகாரம்; வாக்குவாதம் எல்லை மீறியதில், ஒருவர் பலி

🕔 December 27, 2017

காதல் விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, இடம்பெற்ற தாக்குதலில் – ஒருவர் கொல்லப்பட்டார்.

எகலவத்தை – ரத்தோட்ட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நபர்களுக்கிடையில், காதல் விவகாரம் தொடர்பில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றபோது, ஒருவர் – மற்றவரின் தலையில் கூரான பொருளொன்றினால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் 46 வயதுடைய ஒருவரே இறந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் 27 வயதான இளைஞர் எனவும், அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments