மகனைக் களமிறக்கினார் மாவை; வடக்கு தேர்தல் களத்திலும் வாரிசு அரசியல்

🕔 December 21, 2017

லங்கை தமிழரசுக் கட்சியின் தலைருவம் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தனது மகன் கலையமுதனையும் உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில், மாவையின் மகன் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டார் என தெரியவருகிறது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக, மாவையின் மகன் பெயரிடப்பட்டுள்ளார்.

யுத்த காலத்தில் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜாவின் மகன், அண்மையில்தான் நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, மாவை சேனாதிராஜாவின் சகோதரர் செல்வரட்ணம் விண்ணப்பித்திருந்த போதும், சகோதரருக்கு சந்தர்ப்பத்தை மறுத்து, மகனை மாவை களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments