அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

🕔 December 5, 2017

ரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது.

தங்கல்ல – குடாவெல்ல பகுதியிலுள்ள குறித்த வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

கொள்ளையர்கள் வங்கியை விட்டு தப்பியோடும் போது, துப்பாக்கி சூடு நடத்தியபோது, அங்கிருந்த வாடிக்கையாளரின் காலில் குண்டு பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குறித்த வாடிக்கையாளர் தங்கல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு. அங்கு அனுமதிக்கப்பட்டார்.

கொள்ளையர்கள், தமது முகத்தை முற்றாக மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments