கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

🕔 November 26, 2017

– அஷ்ரப் ஏ. சமத் –

பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே இடத்தில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மேற்படி ஜோடிகளுக்கு பெற்றோர்கள திருணம் நிச்சயித்திருந்தும் அதனை நடத்தி முடிப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இவர்களை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை நடத்தி வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா்.

இதற்கிணங்க, துபாய் நாட்டின் தூதுவர் அல் முல்லாஹ்வின் அனுசரணையினைப் பெற்று, இவர்களுக்கான திருணம் நடத்தி முடிக்கப்பட்டது.

இதன்போது,  ஒவ்வொரு ஜோடிக்கும் 02 லட்சம் ருபா பெறுமதியில் 15 ஜோடிகளுக்கும் தங்க மாலை மற்றும் தளபாடம் ஆகியவற்றினை துபாய் தூதுவவர் வழங்கினார்.

அதேவேளை, மெரைன் ரைவ் ஹோட்டலில் சகல ஜோடிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ராப்போசனமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கைக்கான துபாய் தூதுவர் மற்றும் அமைச்சர் பௌசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்