கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

🕔 July 22, 2017

– எம்.வை. அமீர் –

‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அகமட் அம்ஜத் மற்றும் கலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.எம். நௌஷானா ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மருதூர் கலைக்கூடல் மன்றம், மருதூர் தக்வா கோலாட்டக்குழு, வெண்ணிலா இசைக்கலா மன்றம் மற்றும் தாறுல் இஸ்லாம் அத்தஅவிய்யா கலாசார அமைப்பு ஆகியவை கலந்துகொண்டு தமது கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றின.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் தலைவர் டொக்டர் நாகூர் ஆரீப் மற்றும் சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.எம். உதுமாலெப்பை உள்ளிட்ட பலர், நிகழ்வில் அதிதிகளாகக் கலந்துகொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்