உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

🕔 March 25, 2017

ரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது.

நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில், இந்தச் சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்றவை குறித்தும், தேர்தல்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையிலும், இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் செப்டம்பர் மாதம் நிறைவடைந்ததும், அந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கத்துக்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை என்று, முன்னர் தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணய அறிக்கை கிடைக்கவில்லை எனும் காரணத்தைக் காட்டி, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள், இரண்டு தடவை பிற்போடப்பட்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்