ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது

🕔 December 25, 2016

tu-154-011ஷ்யாவிலிருந்து சிரியா நோக்கிப் பயணித்த ரஷ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் TU — 154 எனும் ராணுவ விமானம்  91 பயணிகளுடன் கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிரியாவிலுள்ள ரஷ்ய முகாமுக்குச் செல்வதற்காக, குறித்த விமானம்  புறப்பட்ட  சில நிமிடங்களில், கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது, விமானம் மறைந்துள்ளது.

மேற்படி ராணுவ விமானத்தில் புகழ்பெற்ற ராணுவ இசைக்குழுவினர் இருந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 83 பயணிகளும் 8 ஊழியர்களும் இருந்தனர். மேலும் 09 ஊடகவியலாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்