பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

🕔 January 19, 2016

Ranil - 0998லக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார்.

அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் பிரதமருடன் பயணிக்கும் குழுவில் அடங்குகின்றனர்.

நாளை புதன்கிழமை புதல் முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள, பொருளாதார மாநாட்டில் புதிய போக்குகள் தொடர்பாக ஆழமாக ஆரயப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் 40 க்கும் அதிகமான நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர் காலத்தில் உலக நன்மைக்காக உலக தலைவர்களின் திட்டங்களை, இலக்காக கொண்டு செல்வதுடன், உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதார கூட்டு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயற்சிப்பதே இந்த மாநாட்டின் இலக்காகும்.

இலங்கைக்கு முதல் முதலாக உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இம்முறை கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்