அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மஹிந்த; 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்

🕔 November 18, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

1970ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020 இல் அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கடக்கும் மஹிந்த, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார்.

1983ஆம் ஆண்டு சிராந்தி ராஜபக்ஷவை திருமணம் செய்தார். மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றமையை அடுத்து – தொழில் அமைச்சரானார் மஹிந்த.

மஹிந்த ராஜபக்ஷவின் பிற்கால அரசியல் வெற்றிக்கு, அவரின் சகோதரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்