தலைப்புச் செய்திகள்

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Abortion - 011லங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராதவை என, சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் அந்தப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டொக்டர் எஸ். அருள்குமரன் கூறுகையில்; கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளன என்றார்.

மேலும், கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும், சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்