பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது

🕔 March 24, 2018

 பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி.  நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இதற்கமைய லீட்டர் ஒன்றுக்கு 92 ஒக்டைன் பெற்றோல் 09 ரூபாவினாலும், டீசல் 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சுப்பர் டீசர் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் லங்கா ஐ.ஓ.சி. தரப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த விலை மாற்றத்துக்கமைவாக 92 ஒக்டைன் பெற்றோல் 126 ரூபாய், டீசல் 100 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்