செக்ஸ் தேடுவதில் இலங்கை மூன்றாமிடம்

🕔 December 12, 2017

செக்ஸ் என்ற வசனத்தை இணையத்தளத்தில் தேடும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்து வந்த இலங்கை, தற்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திலும், எதியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.

இதேவேளை, இந்தப் பட்டியலில் செக்ஸ் என்ற வாத்தையை இணையத்தில் தேடும் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா ஆகியவை இடம்பிடித்துள்ளன.

அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை காலங்களான ஓகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களிலே அதிகமாக, செக்ஸ் என்ற வசனம் தேடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்து.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்