27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

🕔 December 3, 2017

திர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், கை சின்னத்திலேயே அநேகமான பிரதேசங்களில் களமிறங்கவுள்ளன.

கடந்த 27 வருடங்களாக சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வரும் சுதந்திரக்கட்சியானது, கதிரை மற்றும் வெற்றிலை ஆகிய சின்னங்களிலேயே தேர்தல்களில் களமிறங்கி வந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்