90 கேள்விகளும், தலை சுற்றியமர்ந்த விமலும்; இன்று காலை நடந்தது

🕔 November 7, 2016

Wimal - 074நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் உடல் அஸ்தைக்கு உள்ளானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின்போது, நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் விமலிடம் 90 கேள்விகளை கேட்டுள்ளனர்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய விமல் வீரவன்ச, தலை வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என கூறி தடுமாறியதாகவும், இதனையடுத்து விசாரணை பிரிவின் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தார்.

அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே விமல் வீரவன்ச அழைக்கப்பட்டிருந்தார்.

சிறந்த உடல் நிலை தொடர்பில் அறிவித்ததன் பின்னர் விசாரணை மேற்கொள்வதற்காக வேறு தினத்தை கோரியுள்ள நிலையில், விமல் வீரவன்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்