
சுமார் 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, சட்டவிரோதமான 5.7 மில்லியன் சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்று – செடாவத்தையில் உள்ள ஒரு தனியார் கொள்கலன் தளத்தில் (container yard) பொலிஸார் நடத்திய சோதனையின் போது, கைப்பற்றப்பட்டது.
இந்தச் சோதனையை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று (11) மேற்கொண்டனர்.
துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலனில் ‘மான்செஸ்டர்’ (Manchester) ரக சிகரெட்டுகள் இருந்தன. இவற்றின் சந்தை மதிப்பு 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜா-எல மற்றும் கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் இரண்டாவது புலனாய்வுக் குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்.



