இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

🕔 January 13, 2016

Army logo - 086கி
ரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது.

இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவைாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை ராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ளத் தவறினால், அவருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஹோமாகம நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கிரித்தலே முகாமினை மூடுமாறு ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.

இதேவேளை, கிரித்தலே புலனாய்வு முகாமில் கடமையாற்றி வந்த ராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் முகாமின் பணிகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முகாமின் பொறுப்பு மின்னேரியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்றும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைளுக்காக ராணுவ பொலிஸ் பிரிவு மற்றும் இராணுவத்தின் சட்டப் பிரிவு குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிரித்தலே முகாமின் ஆவணங்களை சோதனையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் கிரித்தலே முகாமில் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்கள் அதிகாரிகளும் வாக்குமூலங்களை அளிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

மிலேனியம் சிட்டி சம்பவத்தின் போது கூட ராணுவ முகாம் சீல் வைத்து மூடப்படவில்லை என சிரேஸ்ட ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடுமென குறிப்பிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்