புகைப்பவர்களில் 93.5 வீதமானோர் தொடர்பாக, புள்ளி விவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

🕔 October 27, 2022

லங்கையில் புகைப்பிடிக்கும் வயது வந்தோரில் 93.5 வீதமானோர், புகைப்பிடித்தலினால் கொடிய நோய்கள் ஏற்படும் என நம்புகின்றனர் என, புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தபோதிலும், அவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அல்லது அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது எனவும், அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மது பாவனை மற்றும் புகைத்தலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சந்தையில் மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்