இம்மாதம் 05, 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவலுக்கு, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

🕔 July 4, 2022

யங்கரவாத தாக்குதல் ஒன்று இம்மாதம் நடத்தப்படாலம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூரும் வகையில், இந்த மாதம் 05ஆம் 06ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சுட்டிக்காட்டி இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக, புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தங்களது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments