போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு; டீசல் கொடுப்பனவை சந்தை விலையில் வழங்கவும்: எம்.பிமார் கோரிக்கை

🕔 July 4, 2022

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணதிலிருந்து கொழும்புக்கு வந்து போவதற்கான வாகன எரிபொருளுக்காக 92,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர்.

அம்பாறையைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு 66,000 ரூபாவை இதற்காக செலவழிக்க உள்ளதாக சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் மாத்தறை உறுப்பினர் ஒருவருககு 54,000 ரூபாவினையும் செலவு செய்ய வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தமது எரிபொருள் கொடுப்பனவில் ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்கள், தீர்வொன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கான எரிபொருள் கொடுப்பனவு இன்னும் ஒரு லீட்டர் டீசலுக்காக 111 ரூபாவே வழங்கப்படுவதாகவும், தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப அதனை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments