பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க நியமனம்

🕔 May 12, 2022

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியாவார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், மூன்று தடவை பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இம்முறை நான்காவது முறையாகவும் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏகநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளில் 30 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இவர், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்