நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

🕔 August 27, 2021

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது.

முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென  12 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதுடன்,  மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது.

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தும் பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால், கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் மண் மூடைகள் (Geo bag)   இடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

ஜியோ பேக் (GeoBag)  பைகளில் – மண் இட்டு நிரப்பி  கடல் அரிப்பை தடுக்கும் நடவடிக்கை, எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கரையோரம் திணைக்களத்தினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்