தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடை: சட்ட மா அதிபர் அனுமதி

🕔 April 7, 2021

லங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அமைப்புக்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

தடைவிதிக்க அனுமதி வழங்கப்பட்ட அமைப்புகளின் விவரங்கள் வருமாறு;

1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்
2.சிலோன் தௌஹீத் ஜமாஅத்
3. ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்
5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம் (ஜமியா)
8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
9. அல் கொய்தா (AL-Qaeda) அமைப்பு
10. சேவ் த பேர்ஸ் (Save the pearls) அமைப்பு
11. சுப்பர் முஸ்லிம் (Super Muslim) அமைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்