கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி

🕔 November 20, 2020

மைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கடந்த 1999ம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி கண்டி மேல் நீதிமன்றில்வழக்குத் தொடரப்பட்டது.

வேனில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு ஜனக பண்டார தென்னகோன் உத்தரவிட்டிருந்தார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தம்புள்ள பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணியில் கலந்து கொள்ள அமைச்சர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கைது செய்யப்பட்டு, நொவம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களையே ரத்து செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்பொழுது அறிவித்துள்ளது.

Comments