தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள்

🕔 August 9, 2020

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார்.

94 ஆயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து, இம்முறை எந்தவொரு தமிழரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.

கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கே. கோடீஸ்வரன் அம்பாறை மாவட்டத்திலிருந்து தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் குழுவினர் தேர்தலில் போட்டியிட்டு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமையினால், தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு பிரதிநிதியையும் வென்றெடுக்க முடியவில்லை.

இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அம்பாறை மாவட்டத்தில் கலையரசன் பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்