மேல் மாகாண ஆளுநராக, விமானப் படையின் முன்னாள் தளபதி நியமனம்

🕔 March 24, 2020

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மாஷல் ரொஷன் குணதிலக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, கடந்த வாரம் அவின் பதவியை ராஜினாமா செய்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் அடுத்து, ஆளுநர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி, மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபொல கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

சீதா அரம்பொல ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரம்பும் வகையில், ரொஷான் குணதிலக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments