உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

🕔 April 18, 2018

லகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இன்று புதன்கிழமை காலை மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிறது.

எரிபொருள் நிருப்புவதற்கும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்குமாக மேற்படி விமானம், இன்று காலை 6.18 மணிக்கு தரையிறங்கியது.

யுக்ரைனுக்குச் சொந்தமான இந்த விமானம் அன்டனோ An-225 Mriya என அழைக்கப்படுகிறது.

24 பணியாட்களுடன் இந்த விமானம் இன்று இரவு கிளம்பவுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வழியில், இந்த விமானம் மத்தளையில் தரையிறங்கியது.

285 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விமானம் ஒரே தடவையில், 640 தொன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடியதாகும்.

இவ்விமானம், 84 மீற்றர் நீளமும் 18 மீற்றர் உயரமும் கொண்ட கொண்ட இந்த விமானம் 88 மீற்றர் சிறகுகளுடனான அகலத்தையும் கொண்டதாகும்.

Comments