கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில்

🕔 April 16, 2018

– க. கிஷாந்தன் –

ல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயார் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய மகனும்  உயிரிழந்துள்ளனர்

காரினுடைய வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தந்தையே காரினை செலுத்தியுள்ளார்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments