பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி

🕔 November 2, 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

92 ஒக்டைன் பெற்றோலின் விலை,  லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது ஒரு  லீட்டர் பெற்றோல் 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அதேபோன்று, ஓட்டோ டீசல், லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது 116 ரூபாய்க்கு மேற்படி டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

நிதியமைச்சினை பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த விலைக் குறைப்பினை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, தொலைத்தொடர்பு வரி 25 வீதத்திலிருந்து 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொலைபேசிக் கட்டணங்கள் குறைவடையும்.

மேலும் சீனி, கடலை மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான வரிகளும், விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்