யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 24, 2018
– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.

ஜயசூர்ய (வயது – 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே, கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு தலையிலும் மற்றவருககு முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகப் பிரிந்து நீண்ட நாள்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து இருவரைக் குத்தியதாக,  விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

இதேவேளை, கைகலப்பில் மேலும் சில மாணவர்ளும் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments