இலங்கையர்கள் 400 பேருக்கு, நாளை இரட்டைக் குடியுரிமை

🕔 May 15, 2018

எம்.என். ரணசிங்க

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 400 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் – கடந்த 03 ஆண்டுகளில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments