நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

🕔 December 4, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார்.

இந்தக் காருக்கான வரி மட்டும் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

5000 கன சென்ரிமீற்றர் இயந்திர கொள்ளளவினைக் கொண்ட இந்தக் கார், மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.

ஜிஹான் ஹமீட் எனும் வர்த்தகப் பெண் ஒருவரே இந்தக் காரினை இறக்குமதி செய்துள்ளார்.

இவர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில்,  ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அதன்போது இவருக்கு நாமல் ராஜபக்ஷவும் ஆதரவு வழங்கியிருந்தார்.

இந்தப் பெண்ணின் கணவர் றிசாட் ஹமீட் என்பவர், வாகனங்களை இறக்குமதி செய்பவராவார்.

மேற்படி ஜிஹான் ஹமீட் எனும் பெண், கொழும்பில் சொந்தமாக வாகன விற்பனை நிலையமொன்றினை நடத்தி வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்