நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

🕔 October 27, 2017
பாறுக் ஷிஹான் –

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய், தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

அரியாலை ஏ.வி. ஒழுங்கையைச் சேர்ந்த 28 வயதுடைய சுனேந்திரா எனும் குடும்பப் பெண், ஹர்சா (04 வயது), சயித்தி (02 வயது), சரவணன் (02 வயது) ஆகிய தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

இறந்த குழந்தைகளில் இருவர் இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நால்வரின் சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது.

தனது கணவர் – அவரின்  நண்பர் ஒருவருக்கு  கொடுத்த கடன் திரும்பவும் கிடைக்காத காரணத்தினால் கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினால் தானும் பிள்ளைகளும் தற்கொலை செய்வதாகவும்அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்