தலைப்புச் செய்திகள்

உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி

Bike race - 022சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டியொன்று, இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை  முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

பிரதேச செயலக வீரர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்தப் போட்டியினை,
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி சைக்கிள் ஓட்டப் போட்டியில் 01ம் இடம்பெற்ற திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இஸ்ஸதீன், 02ம் இடம்பெற்ற முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம். ஜிப்ரி, மற்றும் 03ம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.Bike race - 011