தலைப்புச் செய்திகள்

காழி நீதவானும் மனைவியும் கைது

கொழும்பு வடக்கு காழி நீதிமன்றத்தின் நீதவானையும் அவரின் மனைவியையும் விவாகரத்துத் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக 65,000 ரூபாயை லஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நீதிவானின் மனைவி அதே காழி நீதிமன்றத்தில் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

விவாகரத்து வழக்கொன்றில் தீர்ப்பை தாமதமின்றி வழங்குவதற்காக, சந்தேக நபர்கள் இந்தத் தொகையைக் கோரியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த லஞ்சச் சம்பவம் குறித்த முறைப்பாட்டின் பேரில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நீதவானும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.