தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

🕔 February 22, 2021

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிணங்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள அவர், இனி கைதி – என் (N) 12516 என அழைக்கப்படுவார்.

எவ்வாறாயினும் சிறைசிலுள்ள சக கைதிகளால் ரஞ்சன் ராமநாயக்க மிகவும் மேன்மையாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறைச்சாலையில் வழங்கப்படும் சில உணவுகளை ரஞ்சன் சாப்பிடுவதற்கு சிறைக்கைதிகள் அனுமதிப்பதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மற்றைய கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டியில் ஒரு வாளியைப் பயன்படுத்தி, தன்னை சுத்தம் செய்து கொள்வதற்கு, ரஞ்சன் ராமநாயக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்காலிகமான சில பொருட்களைக் கொண்டு தனது உடலை நேர்த்தியாக வைத்திருப்பதற்காக உடற்பயிற்சிகளை சிறைச்சாலையினுள் ரஞ்சன் மேற்கொண்டு வருகிறார். 05 லீட்டர் கொள்ளளவுடைய இரண்டு தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஒரு தடியைக் கொண்டு, தனது தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை ரஞ்சன் உருவாக்கியுள்ளார்.

சிறைத் தண்டனையை அனுவிக்கத் தொடங்கியவுடன் ரஞ்சன் ராமநாயக்க தனது தலைமுடியை முழுவதுமாக மழித்து விட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்