பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

🕔 June 12, 2020

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை வக்பு சபை கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 30 பேர் மட்டுமே தொழ முடியும் என ஏற்கனவே வக்பு சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தொழுகை நடக்கக் கூடிய பள்ளிவாசல்கள் சிறியதாக இருந்தால், அங்கு ஒரே தடவையில் தொழ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் அரைவாசித் தொகையினரே (25 பேர்) அனுமதிக்கப்படுவர் எனவும் வக்பு சபை குறிப்பிட்டுள்ளது.

முன்னர் தெரிவிக்கப்பட்டமை போன்று கூட்டுத் தொழுகை, ஜும்ஆ தொழுகை ஆகியவற்றுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை.

பள்ளிவாசல்களைத் திறப்பது தொடர்பாக வக்பு சபை – இம்மாதம் 03ஆம் திகதியன்று அறிவித்த ஏனைய அனைத்துப் பணிப்புரைகளும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்