தலைப்புச் செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அறுவர், போதைவஷ்து பாவனையாளர்கள்

நாட்டில் மேலும் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 6 பேர் ஜா – எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த 06 பேரும் ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜா – எல பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட மேற்படி 06 பேரும், போதைவஸ்து பாவனையாளர்கள் என, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரிடம் இருந்து இவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாகவும் சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தெஹிவளையைச் சேர்ந்த மற்றொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரணகுணம் அடைந்துள்ளனர்.